Friday, August 30, 2013

தண்டிக்கப்படாத சிரியாவும் சிறீலங்காவும்; இரசாயனத் தாக்குதல் வடிவம் ஒன்றே.!!


சிரியாவிலும் சிறீலங்காவிலும் ரஷ்சியாவின் தயவோடு அதன் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு அப்பாவி மக்கள் மீதும் போராளிகள் மீதும் அரச படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. இவை சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய பாரிய போர்க்குற்றங்களாகும்.

சிறீலங்கா மகிந்த ராஜ்பக்ச அரசு வன்னியில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய இரசாயனத் தாக்குதலின் அதே சாயலை சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலிலும் காண முடிகிறது. இரண்டு நாட்டிற்கும் ரஷ்சியா இறுதி வரை இராணுவ இராஜீய உதவிகளை அளித்து வந்துள்ளமை வெளிப்படை உண்மையாகும்.

சிரியாவில் இரசாயனத் தாக்குதலுக்கு சர்வதேசம் இராணுவ ரீதியில் நடவடிக்கை எடுக்க எத்தணிக்கும் அதே நேரம் சிறீலங்காவில் இதே வகை இரசாயனத் தாக்குதலை நடத்திய சிங்கள அரசும் படைகளும் திட்டமிட்டு தப்ப வைக்கப்படுகின்றன.

சிரிய.. சிறீலங்கா இரசாயன தாக்குதல் விளைவுகளை அதாரப்படுத்துவோம். அது போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் தரும்.. எமது செயற்பாட்டாளர்களுக்கு உதவி நிற்கும்.





Sri Lankan Government uses Chemical Weapons in Vanni (Northern part of Sri Lanka) Warfront, WWW urges immediate dispatch of independent observers for inquiry into war crimes.

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 3:14 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க