Thursday, October 18, 2007

ஈழத்தில் சர்வதேச போரியல் விதிகளை மீறிய இந்தியப்படை.



சர்வதேச போரியல் விதிகளின் கீழ் பாடசாலைகள் வழிபாட்டிடங்கள் வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்துவதும் போரியல் குற்றமாக கருதப்படும்.

21-10-1987 சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் அமைதிப்படை என்ற பெயரில் ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வருவதாக் கூறி வந்த இந்திய மத்திய அரசின் படையினர், விடுதலைப் புலிகளை அழிக்க என்று கூறி மேற்கொண்ட "பவான்" இராணுவ நடவடிக்கையின் போது யாழ்ப்பாண வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தி, வைத்தியர்கள்,மருத்துவத்தாதிகள் மற்றும் நோயாளிகளைக் கொன்று குவித்ததுடன் பெண்களை பாலியல் வல்லுறவுக்கும் உட்படுத்திப் படுகொலை செய்தனர்.



படுகொலை செய்யப்பட்ட அரசாங்க வைத்தியசாலை பணியாளர்கள். (நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் விபரங்கள் இதில் அடக்கப்படவில்லை.)

இந்த துயரம் தோய்ந்த நிகழ்வின் 20 ஆண்டு நினைவையொட்டி.. வரையப்பட்ட கருத்தோவியம் தான் முதலாவதாக இணைக்கப்பட்டுள்ள படம்.

யாழ் இணையத்துக்காக வரையப்பட்டுள்ளது. கருத்தோவியர்- மூனா.

ஆதார இணைப்புக்கள்.

பதிந்தது <-குருவிகள்-> at 2:32 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க