Monday, October 22, 2007

குர்திஸ் விடுதலைப் போராட்டமும் துருக்கியும்..!



பி கே கே போராளிகள்.

ஈராக்கின் வடக்கு எல்லையில் துருக்கியோடும் ஈரானோடும் ஈராக்கோடும் உள்ள தங்கள் பூர்வீக நிலப்பரப்பில் குர்திஸ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் குர்திஸ் தொழிலாளர் கட்சி (PKK)யினர், கடந்த 1970 களின் பிற்பகுதியில் இருந்து துருக்கி மற்றும் ஈராக்குடன் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பத்தில் தனிநாடு வேண்டி ஆரம்பித்து பின்னர் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி வேண்டுதலோடு குறுக ஆரம்பிக்க.. அதைப் பலவீனமாகக் கருதிக் கொண்ட துருக்கிய மற்றும் ஈராக் அரசுகளும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக தேசங்களும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக பட்டியலிட்டு பி கே கே யையும் சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் இட்டு அக மகிழ்ந்து கொண்டன.



குர்திஸ் தேசம்

ஆனால் இன்று.. அமெரிக்க படைகள் ஈராக்கில் நிலை கொண்டிருக்க.. துருக்கியப் படையினருடன் கடும் மோதலில் ஈடுபட்டு இருக்கிறது பி கே கே. இன்று ஈராக் எல்லையை ஒட்டி நடந்த சண்டையில் 12 துருக்கியப் படையினரும் 32 போராளிகளும் இறந்துள்ளதாக துருக்கிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் போராளிகளோ தாங்கள் பல துருக்கியப் படையினரை சிறை பிடித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்தச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் அதேவேளை பி கே கே யை சர்வதேச பயங்கரவாதிகளின் பட்டியலில் இட்டுள்ள அமெரிக்காவோ.. அமெரிக ஆதரவு ஈராக்கோ..இச்சண்டை தொடர்பில் எதுவும் கூறாது மெளனம் காத்து வருகின்றன. முன்னர் துருக்கி தனது படைகளை குர்திஸ்- ஈராக் எல்லை நோக்கி நகர்த்திய போது அமெரிக்காவும் ஈராக்கும் துருக்கியை பொறுமைகாக்க வலியுறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பி கே கே மலை சார்ந்த பிரதேசங்களை பதுங்கிடமாகக் கொண்டு தாயக விடுதலைக்காகப் போராடி வருகிறது.குர்திஸ் சுயாட்சிப் பிரதேசமே ஈராக்கில் இன்று ஓரளவு அமைதியான பிரதேசமாக விளங்குகிறது.

பி கே கே யினரும் 2004 வரை 5 வருடகால போர்நிறுத்தத்தைக் கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட்டது யாழ் இணையத்தில். மேலதிக தகவல் சேர்த்தது குருவிகள்.

மேலதிக தகவல் இங்கு.

பதிந்தது <-குருவிகள்-> at 12:59 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க