Monday, November 26, 2007

வீர தீபமேற்றி எம் மாவீரரை நினைவிருத்துவோம்.



மனித வரலாற்றில் பொதுநலனுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்வதென்பது சாதாரண மனிதர்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதது. ஆனால் தமிழீழ மக்களின் வரலாற்றில் அது சர்வ சாதாரணமானது. அதற்குக் காரணம் சிங்கள பெளத்த அரச பயங்கரவாதத்தினதும் அதன் பேரினவாதப் போக்கினதும், பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளினது ஆதிக்க வெறிப் போக்கினதும் பால் எழுந்த நிர்ப்பந்தங்களும் தமிழர்களின் தாயக இருப்பையும், தமிழின அடையாளங்களையும், உலகில் உயிர்களுக்கே உரிய அடிப்படை உரிமைகளையும் தமிழர்களிடம் இருந்து தட்டிப்பறிக்க முற்பட்டமைகளும் அதன் நோக்கிய திசையில் இன்று வரை அவர்களின் செயற்பாடுகள் தொடர்வதுமே ஆகும்.!

மனித வரலாற்றில் அதி உன்னத சாதனைகளைப் புரிந்து தமது இனத்தின் உலக இருப்பைக் காக்கவும், அதன் பூர்வீக தாயக நிலப்பரப்பை மீண்டும் பூமித்தாயின் மடியில் எதிரிகளிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திரக் காற்றை தமது இன்னுயிர் மக்கள் சுவாசிக்கவும் என்று தமது மூச்சுக்காற்றுகளால் எதிரிகளுடனான போர்க்களங்களில், சதிக்களங்களில் வீர தீபங்கள் ஏற்றி எதிரிகளின் இமாலய பலத்தைக் கூட பல வியத்தகு தியாகங்கள் மூலம் தகர்த்து தமிழீழ மக்களாகிய எமக்கு பாதுகாப்பளித்த எம்முயிரினும் மேலான எம் மாவீரக் கண்மணிகளுக்கு வீர தீபமேற்றி உணர்வுகளால் வழிபடுவோம். அவர்களின் இலட்சியத்தைப் பற்றுறிதியோடு தாங்கி அது வெற்றி பெற எம்மாலான அனைத்தையும் செய்வோம் என்று உறுதிகொள்வோமாக..!

பதிந்தது <-குருவிகள்-> at 12:25 PM

1 மறுமொழி:

Blogger aaru செப்பியவை...

நிச்சயமாக. இவர்கள் இல்லை என்றால் நாம் இன்று உயிருடன் இருக்கமுடியாது.

Mon Nov 26, 01:26:00 PM GMT  

Post a Comment

<< முகப்புக்குச் செல்க