Wednesday, November 07, 2007

ஸ்பெயின் போராளி அமைப்பு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரமரியாதை செலுத்தியது.



இது குறித்து நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும், பாஸ்க் தனியரசுப் போராட்ட இயக்கமான (Basque) பற்றசுனா கட்சி, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிரைப் பறித்ததன் மூலம், அமைதி வழியிலான தீர்வு முயற்சிகளில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நேர்மையுடன் செயற்படவில்லை என்பது, நிரூபணமாகியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது.

அறிக்கையின் தமிழ் வடிவம்:

பாசிஸ சிறீலங்கா அரசாங்கத்தின் வான்வழித் தாக்குதலில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரும், தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான திருவாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மேலும் ஐந்து அதிகாரிகளும் கொல்லப்பட்டதையிட்டு, பாஸ்க் மக்களின் தன்னாட்சி உரிமைக்காக போராடும், பாஸ்க் தனியரசுப் போராட்ட இயக்கமான பற்றசுனா கட்சி ஆழ்ந்த அதிர்ச்சியடைகிறது. தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில், அமைதி வழியில் தீர்வு காண்பதில், அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நேர்மையுடன் செயற்படவில்லை என்பதற்கான மற்றுமொறு உதாரணத்தை இது கோடிட்டுக் காட்டுகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக, திருவாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் செய்த தன்னலமற்ற ஈகங்களுக்கு பற்றசுனா கட்சி வீரமரியாதை செலுத்துவதோடு, சிறீலங்கா வான்படையின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் ஏனைய அதிகாரிகளுக்கும், அண்மையில் உயிர்நீத்த கரும்புலி மாவீரர்களுக்கும், கடந்த மாதங்களில் விடுதலைப் போராட்டத்தில் உயிர்துறந்த ஏனையோருக்காகவும், தமிழ் மக்களுடன், நாமும், நேர்மையுடன் இயங்கும் ஏனைய பாஸ்க் மக்களும் இணைந்து, வீரமரியாதை செலுத்தி நிற்கின்றோம்.

தனது தலைவிதியை தமிழீழம் நிர்ணயிப்பதற்கான உரிமையை அங்கீகரிக்கும் வகையில், சமாதான வழியில் சமத்துவமான தீர்வை ஏற்படுத்துவதில், சிறீலங்கா அரசு பற்றுறுதி கொண்டிருக்கவில்லை என்பதை இந்தப் படுகொலை உணர்த்துகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக அவர் செய்த தன்னலமற்ற ஈகங்களுக்கும், தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்கும், நாம் வீரமரியாதை செலுத்துகின்றோம்.

விடுதலைக்கான தமிழீழ போராட்டம் வாழ்க!

அனைத்துலக ஒருமைப்பாடு நீடித்து நிற்கட்டும்!

பன்னாட்டுப் பிரிவு,

பற்றசுனா

ஆதாரம் சங்கதி.கொம் - இங்கு அழுத்தி பிரதான இணைப்புக்குச் செல்க

பதிந்தது <-குருவிகள்-> at 12:15 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க