Friday, November 02, 2007

தமிழ்செல்வனைக் கொல்ல பாவிக்கப்பட்டது thermobaric குண்டு..?!



thermobaric குண்டுகள் செயற்படும் முறை.

தமிழ்செல்வன் அண்ணா உட்பட்ட போராளிகள் சிறீலங்கா விமானப்படை வீசிய குண்டின் நேரடித்தாக்கத்தால் இறக்காமல் அது காற்றில் ஏற்படுத்திய அழுத்த மாற்றத்தின் விளைவாக உடற்காயங்கள் இன்றி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என்ற செய்தி அவர்களின் இருப்பிடம் நோக்கி thermobaric குண்டுகள் வீசப்பட்டனவா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.

அண்மைய காலங்களில் இதே குண்டுகளை ரஷ்சியா செச்சின் போராளித்தலைவர்களைக் கொல்லவும் இஸ்ரேல் கமாஸ் தலைவர்களைக் கொல்லவும் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானில் போராளிகளைக் கொல்லவும் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த வகை தாக்குதல்களில் இவை ஆரம்பமே என்றும் மேலும் தாக்குதல்கள் தொடரும் என்பதுடன் ஒவ்வொரு தலைவராக புலிகளின் தலைமையை தாம் அழிக்கப் போவதாக கோத்தபாய ராஜபக்ச தமிழ்செல்வன் அண்ணாவின் வீரச்சாவின் பின்னர் ரொயிட்டருக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்..!

இந்த எச்சரிக்கைகளை சவாலாக எடுக்கும் அதேவேளை போராளிகளின் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நகர்வுகளை செய்ய வேண்டி பொறுப்பு புலிகள் அமைப்பைச் சாரும்.


----------

Reports say Mr Thamilselvan and his colleagues were killed by the pressure of the bomb blast which left their bodies otherwise unscathed.

Sri Lankan military spokesman Brig Udaya Nanayakkara said intelligence had confirmed that the head of the Tigers' political wing was dead.

He described the attack as a success and said the military had got rid of a leader who was at the top of the list.

It remains unclear how the military knew of Mr Thamilselvan's whereabouts.

Defence Secretary Gotabaya Rajapaksa, President Mahinda Rajapaksa's brother, warned rebel leaders to beware.

"This is just a message, that we know where their leaders are... if we want we can take them one by one," he told Reuters news agency.


மேலதிக தகவல்கள் இங்கு.

thermobaric குண்டுகள் மற்றும் அவற்றின் பாவனை பற்றி அறிய இங்கு அழுத்துக.

தகவல் யாழ் இணையம்.

பதிந்தது <-குருவிகள்-> at 11:21 AM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க