Thursday, April 23, 2009

புலியும் பிரபாகரனும் அழிச்சு முடிஞ்சுது: அடுத்தது என்ன..?!நாம் பதுங்குவது பாய்வதற்கே அன்றி பகைக்குப் பயந்தல்ல..!

இந்தியா போன்ற நாடுகளினதும் ஈழத்துக்குள்ளேயே இருக்கும் புலி எதிர்பார்ப்பாளர்களினதும் நீண்ட நாள் எதிர்பார்ப்பு ஒன்று ஈடேறப் போகின்ற இந்த வேளையில்.. அவர்களால் எதிரிகளாக பாசிசவாதிகளாக பயங்கரவாதிகளாக பார்க்கப்பட்ட புலிகளும் அதன் தலைமையும் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டாயிற்று என்ற செய்தியை சிறீலங்கா சிங்கள அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சவும் சிங்கள இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும் அறிவிக்கவுள்ளனர்.

தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியில் இருந்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட அனைவரின் கருத்தையும் கவனத்தையும் கவர்ந்தவர் பிரபாகரன். அதுமட்டுமன்றி இனமானமுள்ள தமிழ் மக்களின் இதயங்களில் வாழும் சூரியத் தேவன் அவர் என்பது ஒரு புறம் இருக்க.. உலகின் முன் பயங்கரவாதியாக, பாசிசவாதியாக சித்தரிக்கப்பட்ட அல்லது காட்டப்பட்ட பிரபாகரன் இன்னும் சில மணி நேரங்களின் பின் அழிக்கப்பட்டு விடுவார் என்ற தகவல்களை இந்திய, சிறீலங்கா ஊடகங்கள் IPL கிரிக்கெட் போட்டி நேரடி வர்ணனை போல் பரபரப்பாக வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில் பிரபாகரனாலும் புலிகளாலும் தான் தமிழ் மக்களுக்கு அழிவு, அதனால் தான் தமிழ் மக்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுக்க முடியவில்லை; புலிகளின் பாசிசத் தலைமை எம்மை அதற்கு அனுமதிக்கவில்லை என்று புலிகள் அமைப்பு உருவான நாளில் இருந்து ஒரு கூட்டம் கத்திக்கிட்டே வருகுது. அந்தக் கூட்டத்தினருக்கு அவர்கள் விரும்பும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் வழிமுறையில் தமிழீழம் அமைத்துக் கொடுக்க இன்று நல்லதொரு வாய்ப்பு அமைந்திருக்கிறது என்றால் அது ஒன்றும் உண்மைக்குப் புறம்பான கருத்தல்ல என்பதை சாதாரண குழந்தை கூட இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளும் அந்தளவுக்கு ஊடகப் பரப்புரை வலிந்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (இப்படிப் புலிப் பாசிசம் பேசிப் பேசியே சிங்களவன் தமிழர்களைக் இனப்படுகொலை செய்வதை கண்டு அதில் புலி அழிப்பு நிகழ்வதாகவும் புலியால் அழிவதாகவும் கூறி சொந்த இன அழிப்பில் அரசியல் செய்த இந்த எட்டப்ப ஓநாய்களும் அவர்களுக்கு தீனிபோட்ட அதிகார, ஆதிக்க, வல்லாதிக்க வெறிபிடித்த சன நாய் அகம் பேசும் பாசிசவாதிகளும் அரசுகளும் எனி என்ன செய்யப் போகிறார்கள். யாரைச் சொல்லி தமிழின அழிப்பை நியாயப்படுத்தப் போகின்றனர். எப்படி தமது எட்டப்ப கோலத்தை மறைக்கப் போகின்றனர்..??! எவ்வாறு புலிப் பாசிசம் கடைப்பிடித்த ஆனால் இவர்கள் என்றுமே கையிலெடுக்காத இரத்தக் கறை படியாத துப்பாகிகள் ரவைகள் குண்டுகள் அழிவுகள் இறப்புக்கள் இன்றிய வழிமுறைகளைப் பயன்படுத்தி தமது எஜமானர்களிடம் கூலி வாங்கிக் கற்றுக் கொண்ட தாரக மந்திரங்களால் தமிழீழம் அமைக்கப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பே இன்று தமிழ் மக்கள் மத்தியில் விஞ்சி நிற்கிறது..!)

சாதாரண மனிதனாக வாழ்ந்த ஒருவரை புரட்சியாளனாக்கி இராணுவ வீரனாக்கி ராஜதந்திரியாக்கி தனக்கான ஏஜெண்டாக்கி பின்னர் கொலையாளாக்கி பயங்கரவாதியாக்கி தானே உருவாக்கிய சதாம் குசைனை தானே படையெடுத்து கைது செய்து தூக்கிட்டுக் கொன்றது அமெரிக்கா. இதற்காக அமெரிக்காவால் செலவிடப்பட்ட டொலர்கள் பல மில்லியன்களாக இருக்கின்றன. பலியிடப்பட்ட உயிர்கள் பல்லாயிரக்கணக்காக இருக்கின்றன. ஆனால் உலகம் சதாம் குசைனை பயங்கரவாதிகாக சாகடித்த போது அவரை பயங்கரவாதியாக உச்சரித்துக் கொண்ட அளவுக்கு அவரை உருவாக்கிய அமெரிக்காவை தண்டிக்கவோ கண்டிக்கவோ பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்தவோ தற்துணிவின்றி இருந்துவிட்டது. காரணம் அமெரிக்கா அணு ஆயுத வல்லமை கொண்ட உலக வல்லரசு. அது நினைப்பதை அது செய்யலாம். அது நினைத்தால் மனிதர்களைக் கொல்லலாம் குளோனிங்கும் செய்யலாம் ஆனால்.. மற்றவர்கள் செய்யக் கூடாது.

இந்தியாவுக்கும் இது பொருந்தும். தனது சொந்த இன மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசின் கொடுமைகள் கண்டு பொங்கிய ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் தான் பிரபாகரன். தன் கண் முன்னாலேயே தன் தாய் தந்தையரை ஒத்த ஆண்களும் பெண்களும் சிங்களப் படைகளால் கொடுமைப்படுத்தப்பட்டதைக் கண்டு அதற்காக நீதி கேட்க தீர்வு கேட்கப் புறப்பட்டவனே பிரபாகரன்.

பிரபாகரன் பிறக்க முதலே ஈழத்தில் தமிழர்களை படுகொலை செய்யும் சிங்களவர்களின் இனக்கலவரங்கள் பிறந்துவிட்டன. நூற்றுக்கணக்கில் தமிழர்களைப் பலியிடுவது தொடங்கிவிட்டது. தமிழர்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகிக்கப்பது தொடங்கிவிட்டது. ஆனால் அதற்குள்ளும் அடங்கி சிங்களவர்களின் காலடியில் படுத்துறங்கி உயிர்ப் பிச்சை வாங்கி அரசியல் செய்த தமிழர்கள் மத்தியில் தந்தை செல்வா போன்ற ஒரு சிலரே தமிழ் மக்களிற்கு சம அரசியல் உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அதிலும் பல குரல்கள் போலிக் குரல்கள் என்பது பின்னர் தான் தெரிய வந்தன. ஆனாலும் தனது இறப்பு வரை கொள்கை மாறாது குரல் கொடுத்து இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு தமிழீழத் தனியரசுக்கான தேவைப்பாட்டை உறுதி செய்தவர் தந்தை செல்வா.

தந்தை செல்வா காட்டிய அந்த இலட்சியத்தை நோக்கித் தான் பிரபாகரன் ஆயுத வழிப் போராட்டத்தை ஆரம்பித்தார். பிரபாகரனின் ஆயுத வழிப் போராட்டம் என்பது தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற ஒன்று மட்டுமன்றி.. சிங்கள மக்களை எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டதல்ல. சிங்களப் பேரினவாதத்தையும் சிங்கள இன வெறியையும் தூண்டிவிட்டு அதன் மூலம் தமிழினத்தையும் அதன் இருப்பையும் இலங்கைத் தீவில் அழிக்கவும் தமிழர்களின் நிலத்தை வன்பறிப்புச் செய்யத் தூண்டியவர்களையும் அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற தமிழர்களின் தாயக மண்ணில் ஆயுத பலத்துடன் நுழைந்து கொண்ட சிங்களப் படைகளையும் அதற்கு உதவும் எட்டப்ப தமிழ், முஸ்லீம் அருவருடிகளை எதிர்ப்பதையும் தமிழீழ விடுதலையையுமே நோக்காகக் கொண்டு இருந்தது.. இருந்து கொண்டும் இருக்கிறது.இன்று வரை இதுதான் உண்மையும் கூட.

பிரபாகரன் எனும் அந்த பதின்ம வயது சிறுவன்.. எப்படிப் போராளியானான். எப்படிப் பயங்கரவாதியானான். எப்படிப் பாசிசவாதியானான்.. எப்படி இனமானமுள்ள ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் வாழும் சூரியத் தேவனானான்.. தமிழீழத்தின் தேசிய தலைவனானான்.இவற்றுக்கான விடைகளை இந்த உலகம் இனங்காண நேரத்தைச் செலவிட தயார் இல்லை. ஆனால் இந்த உலகில் தமது ஆதிக்க அதிகார நோங்கள் நிறை வேற வேண்டும் என்று விரும்பும் பாசிசக் கொள்கைகள் கொண்ட சில நாடுகள் தங்களின் விருப்புக்கு ஏற்ப பிரபாகரன் செயற்படமாட்டார் என்பதற்காக தாமே போராளியாக இனங்காட்டிய அவரை பின்னர் பயங்கரவாதியாக சித்தரித்துக் காட்டி இன்று பிரபாகரனை தண்டிக்கின்றோம் என்ற போர்வையில் ஆண்டாண்டு கால தமிழர் பகைவனான சிங்களப் பேரினவாதத்தோடு சேர்ந்து ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழிப்பதன் மூலம் பிரபாகரனைத் தண்டிப்பதாக கூறிக் கொள்கின்றன.

1952ம் ஆண்டில் இருந்து இன்று வரை தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதிகளின் தாக்குதலை ஒரு தடவை தானும் கண்டித்தறியாத சீனா அண்மையில் ஐநா சபையில் வைத்து புலிகளை பூண்டோடு அழிக்க சிறீலங்காவுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவேன் என்று கூறி இருக்கிறது.

சாதாரண பிரபாகரனை போராளியாக்கி தமது நோக்கங்களுக்காக ஆயுதம் வழங்கி வளர்த்தெடுத்த இந்தியாவோ பிரபாகரன் முன்னொரு காலத்தில் போராளி இப்போ பயங்கரவாதி எங்கிறது. பிரபாகரனையும் புலிகளையும் அழிக்க சிறீலங்காவுக்கு தாம் தேவையான ஒத்துழைப்புக்களை அளிப்பதாக பகிரங்கமாகவே இந்திய பாதுகாப்புச் செயலர் எம் கே நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

1980 களில் பிரபாகரனையும் புலிகளையும் வளர்க்க இந்தியாவுக்கு இருந்த தேவைப்பாடு இன்று இல்லாத நிலை தோன்றி இருக்கலாம். ஆனால் ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரை அன்றிருந்த நிலையை விட மோசமான நிலையை இந்தியா அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்திருக்கிறது. இதிலும் இந்தியா ஈழத்தமிழர் விவகாரத்தில் ஆரம்பத்திலேயே தலையீடு செய்யாத கொள்கையைக் கடைப்பிடித்திருக்கலாம். அப்படி இருந்திருப்பின் எமது போராட்டம் வேறு நட்புச் சக்திகளின் உதவியோடு இன்று வெற்றி பெறக் கூடிய நிலைக்கு வந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும்.

மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை 1983 இனக் கலவரத்தின் பின் சிறீலங்காவின் அன்றைய சிங்கள ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் அன்று 15 பேருடன் இருந்த புலிகள் அமைப்பை பூண்டோடு அழிப்பேன் என்று முழங்கிய போது அன்றைய அமெரிக்க அதிபர் ரெனோல்ட் ரேகன் சிறீலங்காவில் வாழும் மொத்தத் தமிழர்களையும் அழித்தால் தான் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் என்று ஜே ஆர் அரசுக்கு பகிரங்க புத்திமதி சொன்னதும் மட்டுமன்றி இஸ்ரேலிய மொசாட் மற்றும் பாகிஸ்தானிய உளவு அமைப்புக்களின் நேரடி உதவிகளையும் ஜே ஆர் அரசுக்குப் பெற்றுக் கொடுத்து அதன் வழியும் நேரடியாகவும் அமெரிக்க ஆயுத உதவிகளையும் வழங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் அன்று தொட்டு இன்று வரை இந்தக் கொள்கையில் இருந்து பெரிதும் வேறுபட்டிருப்பதாகத் தெரியவில்லை.

இவற்றின் பின்னணியில்.. மத்தியில் தான் பிரபாகரன் தன் சொந்த மக்களின் பலத்தைக் கொண்டு தான் நேசித்த மக்களின் விடுதலைக்காகப் போராடினார். போராடிக் கொண்டும் இருக்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகளின் போராட்டம் கடந்த காலங்களைப் போன்று இப்போதும் நயவஞ்சகம், சூழ்ச்சி, உலக ஒழுங்கு மாற்றம் என்ற சுழற்காற்றுகள் மத்தியில் சிக்கி தேசமாகி கொண்டிருப்பினும் மீளவும் அதனைப் பலப்படுத்த வேண்டிய கடமை இனமானமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரினதும் வாழ்வுரிமைக் கடமை ஆகும். அதுமட்டுமன்றி எமது விடுதலைப் போராட்டம் அழிய அனுமதிப்பின் அதன் போதே தமிழின அழிவும் உலகில் ஆரம்பிப்பதை அனுமதிப்பதாகிவிடும்.

ஈழத் தமிழர்களின் குரல் இன்று சர்வதேச அரங்கில் ஒலிக்கிறது என்றால் அது பிரபாகரனால் தான். சீனாவாலோ இந்தியாவாலோ அமெரிக்காவாலோ அல்ல. ஏன் புலிப் பாசிசம் என்று கூவிக் கொண்டு இருப்பவர்களாலோ அல்ல. இவர்கள் தமிழ் மக்களாகிய எமக்குப் பெற்றுத் தந்தது பேரழிவுகளே அன்றி வேறல்ல. விடுதலைப்புலிகளை இக்கட்டுக்குள் தள்ளி எதிரிகளை எம்மீது போர் செய்யத் தூண்டி எம்மை ஏதிலிகளாக்கி எம்மை அழித்தது புலிப் பாசிசம் பேசும் காட்டிக் கொடுக்கும் காக்கவன்னியர்களும் எட்டப்பர்களும் அவர்களுக்கு தீனி போட்டு வளர்க்கும் எஜமானர்களுமே அன்றி விடுதலைப் புலிகள் அல்ல.

மரபு வழி இராணுவ பலத்தை தமிழர் சேனை இன்று சர்வதேச படைகளின் கூட்டு நடவடிக்கையான "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்" என்பதன் கீழ் இழந்து நிற்பது போன்ற ஒரு தோற்றம் நிலவினும் எமக்கான அடிப்படைப் பலம் இன்னும் எம்மிடம் இருக்கிறது. எமது சூரியத் தலைவனை பாதுகாப்பதுடன் மாண்டு போன எமது மக்களினதும் மாவீரர்களினதும் நினைவு சுமந்து அவர்களின் இலட்சியக் கனவை ஒவ்வொரு இனமானமுள்ள தமிழனும் நனவாக்க பாடுபட இன்றே உழைக்க ஆரம்பிக்க வேண்டும். அதுவே தமிழினத்தின் உலக இருப்புக்கான அடிப்படையாகவும் அமையும்.

எமது போராட்டம் ஆயுத வழி மட்டுமன்றி சாத்தியமான அனைத்து வழிகளையும் பற்றி நிற்பது அவசியமாகின்றது. அதற்கான சகல வழிகளையும் நாம் ஆராய்ந்து தேர்வு செய்து பயன்படுத்தத் தவறக் கூடாது. எதிரிகளின் பலத்துக்கும் அதிகார பாசிச வெறிக்கும் எமது போராட்டம் இலக்காகிச் சீரழியின் அதுவே இந்த உலகில் விடுதலை வேண்டி நிற்கும் ஒட்டு மொத்த மக்களினதும் அடிமை வாழ்வுக்கான முதற்படியாகக் கூட அமையலாம். அதிலிருந்து எம்மையும் எமது தேசத்தையும் உலகையுக் காக்கும் மகோன்னதப் பொறுப்பு இனமானமுள்ள ஒவ்வொரு தமிழனிடமும் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது என்ற நிலையை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

எதிரிகளை அவர்களின் தந்திரங்களின்றும் வீழ்த்தி.. வித்தாகி வீழ்ந்த எம் மக்களினதும் மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்து தமிழர்களின் தாகமாம் தமிழீழத்தை தீர்க்கும் வகைக்கு வாழும் வரை போராட உறுதி எடுத்து சத்தியம் செய்வோமாக.

Labels: ,

பதிந்தது <-குருவிகள்-> at 8:39 AM

34 மறுமொழி:

Anonymous Anonymous செப்பியவை...

பிரபாகரன் எப்படி இனமானமுள்ள ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் வாழும் சூரியத் தேவனானான்.. தமிழீழத்தின் தேசிய தலைவனானான்.REALY HE IS HERO GOOD JOKE.

Thu Apr 23, 11:17:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

விடுதலை பெற்றுக் கொடுத்த எவனும் குறிப்பிட்ட சில கூட்டத்தவரால் உலகில் மதிக்கப்பட்டதில்லை. காந்தியும் தான் சுட்டுக் கொல்லப்பட்டார். காந்திக்கே ஒரு எதிரி இருக்கும் போது.. உங்களைப் போன்ற ஜோக்கர்கள் பிரபாகரனைப் பற்றி அவதூறு பேசவும் இருப்பார்கள். இதையெல்லாம் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை என்றே நினைக்கின்றேன்.

Thu Apr 23, 11:21:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

PRABAKARAN IS A REAL HERO AND AN ICON OF TAMILS

Thu Apr 23, 11:57:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

அடடா! இப்பவும் உங்களைப் போன்ற லூசுகள் இருக்கிறார்களே?
புலிகளுக்கு பின்னால் போனதால் தான் ஈழத் தமிழருக்கு விடியவில்லை.

Tamil Tigers must surrender: UN Security Council
afp, april 23. UNITED NATIONS (AFP) — Tamil Tiger rebels in Sri Lanka must surrender and allow civilians trapped in the battle zone to leave, the UN Security Council president said Wednesday.

Thu Apr 23, 05:00:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

வேதம் ஓதுவதை இன்னும்தான் புலிகள் கைவிடவில்லை. புலிகளுக்காக வேதம் ஓதுபவர்களும் இன்னும் சொற்ப நாட்களுக்குள் அடங்கிப்போவார்கள். ‘ஆடு நனையுதென்று தமிழ்நாட்டு ஓநாய்கள் அழுவது’ தேர்தல் முடியும்வரைதான்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை புலிகள் ஆயுதங்களை கீழே போடவேண்டும் என்று கூறியிருக்கிறது. சர்வதேச சமூகமும் புலிகளின் திருவிளையாடல்களை நன்கு அறிந்துள்ளனர். இந்நிலையிலும் புலிகளும், புலிப்பினாமிகளும் இன்னமும் தாம் தமிழ் மக்களுக்காக போராடுவது என்று சொல்லிக்கொள்வது கேவலம். கேவலத்திலும் கேவலம்.

புலிகளின் வியாக்கியானங்கள் இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான். புலன் பெயர்ந்தவர்களும் தமது உறவுகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு அதுவே போதுமானது. தமிழீழம் - தலைவர் எல்லாம் சும்மா என்றாகிவிடும். ஏனெனில் ‘மோட்கேஜ்’ பிள்ளைகளின் படிப்பு என அவர்களுக்கு தலைக்குமேல பிரச்சினை.

Thu Apr 23, 06:44:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//அடடா! இப்பவும் உங்களைப் போன்ற லூசுகள் இருக்கிறார்களே?
புலிகளுக்கு பின்னால் போனதால் தான் ஈழத் தமிழருக்கு விடியவில்லை//

Even Nelson Mandela also proscribed as TERRORIST in this world. Everyone knows what kind of weapon he used.

Fri Apr 24, 03:44:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

உண்மை உணர்வுகள் என்றும் தேற்பதில்லை
விடுதலை உணர்ச்சிகள் உறங்குவதும் இல்லை
நயவஞ்சகர்களின் பறிக்கும் குழிதன்னில்
வீரம் வீழ்வதும் இல்லை
நாளை சரித்திரம் படைப்பான் - எந்தன்
புலிகளின் தலைவன்.

மகேந்திரன்.

Fri Apr 24, 05:48:00 AM GMT+1  
Blogger K.R.அதியமான் செப்பியவை...

இதுவும் ஒரு மறத்தமிழச்சியின் பேட்டிதான் :
http://news.bbc.co.uk//hi/south_asia/8013016.stm
'I thought, I won't survive'

also pls read thru fully :

Lost opportunities for the Tamils
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=39363

Fri Apr 24, 06:49:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வருகின்ற மக்கள் பலரைச் சந்தித்த அல்ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் டேவிட் சாட்டருடைய வாக்கு மூலமும் இங்கு குறிப்பிடத்தக்கது. ”பெருமளவிலான அகதிகளுடன் கதைத்ததில் அவர்கள் தமிழ் புலிகளின் தலைமை தங்களை நடத்தியது தொடர்பாக மிகவும் வெறுப்புடன் உள்ளனர். புலிகளின் தலைமை தொடர்பாக தமிழ் பொது மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய தலைமை, தமிழ் மக்களுக்கான தாயகத்தை உருவாக்குவதற்காக போராடுபவர்கள், அவர்களை சுரண்டுகிறார்கள், அவர்கள் யுத்தத்தில் இருந்து தப்பியோடும் போது சுடுகின்றார்கள், யுஎன் வழங்கிய மனிதாபிமான உதவிகளையும் களவாடுகின்றனர்.”

Fri Apr 24, 08:12:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

ஏப்ரல் 20ல் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவரான இளம்தாய் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய வாக்குமூலம்.

”என்ரை பெயர் வினோ. நாங்கள் மாத்தளன் ஹொஸ்பிட்டலுக்குப் பக்கத்தில் இருந்த நாங்கள். 20ம் திகதி இரவு ஒரு மணியில இருந்து ஒரே சண்டை நடந்தது. சரியான செல்லடி. நாங்கள் வாறத்துக்காகத்தான் முயற்சி செய்து கொண்டே இருந்த நாங்கள். அதுக்குள்ள பதுங்குகழிக்குள்ள இருந்த நாங்கள் நினைக்கவே இல்லை உயிரோட வருவம் என்று. விடிய ஆறு மணிபோல ஓடி வந்த நாங்கள் வரும் போதும் சரியான செல் அடி. காயப்பட்டுத்தான் வந்த நாங்கள். கனபேர் செத்திட்டாங்கள். நாங்கள் காயங்களோட ஓடி வந்தநாங்கள்.

எனக்கு காலிலையும் கையிலையும் காயம் எனது கணவனுக்கு நாலைந்து இடத்தில காயம். கால்லில கையில உடம்பில தலையில எல்லாம் காயம். இன்னும் செல் துண்டுகள் உடம்பில இருக்குது.

நாங்கள் இங்கால வாறத்துக்காகத்தான் ஒரு மாசமா முயற்சி செய்து கொண்டு இருந்தம். ரெண்டு மூன்று தரம் நாங்கள் வரும்போது சரியான தடையாப் போச்சு. எங்களைத் துரத்தினாங்கள். பிடிச்சுடுவாங்கள். சரியான கரைச்சல்பட்டுத்தான் ரோட்டுக் கரையா ஒரு பதுங்குழிக்குள் இருந்தனாங்கள். அன்றைக்கு சரியான செல் அடி ஆறு மணி வரைக்கும் பங்கருக்கு உள்ளேயே இருந்த நாங்கள். பக்கத்தில எல்லாம் செல் வீழுந்து வெடிச்சது. விடிய எழும்பிப் பார்க்கேக்க எல்லாச் சனமும் ஒடினாங்கள். செல்லும் ரவுண்ஸ்ம் வந்துகொண்டிருக்க நாங்களும் எழும்பி ஓடினம். ஆஸ்பத்திரிக்கு முன்னால ஓடி வந்தநாங்கள். தண்ணிக்குள்ள விழுந்தடிச்சு ஓடி வந்தநாங்கள். அப்பிடி வரேக்க தான் காயப்பட்ட நாங்கள். நிறையப் பேர் செத்தவை. நிறையப் பேர் காயப்பட்டவை.

தங்கட கட்டுப்பாட்டுக்குள்ள இருந்து அங்காள போக வேண்டாம் என்று சொல்லி விடுதலைப் புலிகள் தடுத்தாங்கள். அம்மா சகோதரங்கள் எல்லாம் அங்கால. ஒருதருமே இங்கால வரேல்ல. நானும் என்ர மனுசனும் பிள்ளையும் தான் வந்திருக்கிறம் அவையின்ர நிலமை என்ன என்று ஒன்றுமே தெரியாது.

நாளாந்தம் செல்லடி. நாளாந்தம் ஆட்கள் சாகிறான்கள். நாளாந்தம் ஆட்கள் காயப்படுறான்கள். யார் உயிரோட இருப்பினம் யார் சாவினம் என்று தெரியாது. இப்படியான நிலைமையில எந்த நேரமுமே பதங்குழிக்குள் தான்.

Fri Apr 24, 08:13:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யுத்தத் தவிர்ப்புப் பகுதியில் பொருட்களின் விலை உச்சமாக இருப்பதாக ஐபிசி வானொலிச் செய்திகள் தெரிவித்து இருந்தது. கடந்த பல மாதங்களாக ஐசிஆர்சி ஊடாக யுஎன் உலக உணவுத்திட்டம் அனுப்புகின்ற உதவிகளைத் தவிர எவ்வித விநியோகமும் இருக்கவில்லை. இந்த விலைக்கு விற்கப்பட்ட உணவுகள் என்பது உணவுத் திட்டத்தின் கீழ் அனுப்பப்ட்ட உணவுப் பொருட்களே. தற்போது வெளியேறும் மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்கும் விபரங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. யுத்தப் பகுதியில் இருந்து தப்பி வந்த தந்தையொருவர் அல்ஜசீரா தொலைக் காட்சியில் தாங்கள் அங்கு சாப்பாட்டுக்கு மிகவும் கஸ்ரப்பட்டதாகவும் யுஎன் அனுப்பிய உணவுகளை வாங்கவும் தங்களிடம் காசு இருக்கவில்லை என்றும் அவை உச்ச விலைக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இலங்கை இனவாத அரசு தமிழ் மக்கள் மீது பொருளாதாரத்தடையை விதித்து உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு இராணுவத் தாக்குதல்களை கண்மூடித்தனமாக நடாத்த தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிய புலிகள், அந்த இனவாத அரசு சர்வதேசத்தில் தனது முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள அனுப்பிய குறைந்தபட்ச உணவையும் மக்களிடம் சேரவிடாமல் தடுத்து வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தங்களது பாதுகாப்பிற்காகத் தடுத்து வைக்கப்பட்ட மக்களுக்குக் கூட அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உணவைக் கூட புலிகள் அம்மக்களுக்க வழங்கவில்லை. குழந்தைகளைக் கொண்ட தனது குடும்பம் உணவில்லாமல் பட்டினியால் பட்ட அவஸ்தையையை அத்தந்தை தொலைக்காட்சியில் விபரித்தார்.

Fri Apr 24, 08:14:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//நாளை சரித்திரம் படைப்பான் - எந்தன்
புலிகளின் தலைவன்.
-மகேந்திரன்.//
இலங்கை தமிழர்களை நிம்மதியாக வாழ விடவேமாட்டிங்களா?

Fri Apr 24, 09:37:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

ஐயா அனானிமஸ்.. உங்களைப் பொறுத்தவரை உண்மையைத் தரிசிக்கும் பக்குவம் இல்லை என்று நினைக்கிறேன்.

சிங்கள அரசும் சரி.. உங்கள் போன்றோரும் சரி தமிழ் மக்கள் எப்பாடும் படட்டும்.. புலி எதிர்ப்பை அவர்கள் காட்டுவதாக கதையளக்க வேண்டும்.

1987இல் இந்திய இராணுவம் யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றிய போது ஒரு அகதி முகாமில் இருந்து வெளியே வந்தவன் நான்.

அப்போது இந்திய இராணுவம் சொல்லிய கதைகள் பல. புலிகளை தமிழ் மக்கள் வெறுக்கிறார்கள் என்று அளந்து கட்டியவை பல. புலிகள் தமிழ் மக்களிடம் தட்டிப் பறிக்கிறார்கள் என்று கூறியவை பல.

அதன் பின்னர் 1995 இல் சிறீலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்துக்குள் வந்த போதும் அதனிடம் அகப்பட்டுக் கொண்டேன்.

சிறீலங்கா சந்திரிக்கா அரசு பொருளாதாரத் தடைகளைப் போட்ட போது யாழ்ப்பாண வர்த்தகர்கள் பொருட்களை பதிக்கு வைத்து அநியாய விலைக்கு விற்ற போது விடுதலைப்புலிகள் தான் பொருட்களை நியாய விலையில் விற்க வர்த்தகர்களைக் கேட்டுக் கொண்டனர்.

விடுதலைப்புலிகள் ஒரு போராளி அமைப்பு. அவர்களிடம் மட்டும்படுத்தப்பட்ட வளங்களே இருக்கின்றன. ஒரு அரசாங்கம் கூட இவ்வளவு இலட்சம் மக்களையும் இவ்வாறான ஒரு நெருக்கடி நிலையில் பாதுகாக்க முடியாது.

1995 இடம்பெயர்வாகட்டும்.. 2006/7 சம்பூர் வாகரை இடம்பெயர்வாகட்டும்.. அதன் பின்னான வன்னி இடம்பெயர்வாகட்டும்.. புலிகள் பல ஆயிரக்கணக்கான மக்களை கண்மூடித்தனமான சிங்களப் படைகளின் ஆக்க்கிரமிப்பு வெறித் தாக்குதலில் இருந்து பாதுகாத்துள்ளனர். இப்போதும் கூட தம்மால் இயன்றதை தமது சக்திக்கும் அப்பாற்பட்டு தியாகங்களூடு செய்கின்றனர்.

சுனாமியின் போது கூட அவர்கள் மக்களுக்காக உழைத்தனர். அதை உலகமே வியந்து பாராட்டியது. அப்படிப்பட்ட புலிகள் இப்போ.. அதே மக்களை தண்டிப்பதாக சிங்களவன் சர்வதேசத்தின் உதவியைப் பெற்று தள்ளாடிக் கொண்டிருக்கும் சிங்களத்தின் பொருளாதாரத்தை சமாளிக்க அளக்கும் கதைகளுக்கு பரப்புரை செய்யும் நீங்கள் தமிழர்களா..??!

இப்படியான பரப்புரைகளுக்கு இது இடமில்லை. உண்மையை சொல்லுங்கள் கேட்கலாம்.

இராணுவத்திடம் போகும் எந்தப் பொதுமகனும் நான் புலி ஆதரவாளன் புலிகள் நல்லது செய்தது நீதான் கெட்டனி என்று சொல்லமாட்டான். உயிருக்குப் பயந்து பொதுமகனாக உள்ளவன்.. போராளியின் துணிவை வெளிப்படுத்த முடியாது. எதிரியின் கைகளில் இருந்து கொண்டு அவனை விமர்சிக்க வீரனைத் தவிர வேறு எவருக்கும் துணி வராது. உயிர் காக்க சொல்லப்படும் பொய்கள்.. உண்மையாகா.. என்பதை கடந்த காலங்களில் வெவ்வேறு இராணுவ ஆக்கிரமிப்புக்களின் போதும் அதன் பின்னும் மக்கள் வெளிப்படுத்திய உணர்வுகளில் இருந்து அறிந்து கொண்டிருப்பீர்கள்.

சிறீலங்கா அடிப்படையில் ஒரு ஜனநாயக நாடு அன்று. அது சிங்கள பெளத்த பயங்கரவாதத்தாலும் அதன் அருவருடி கூலிக் கும்பல்களாலும் மக்கள் மீது துன்புறுத்தல்கள்.. வன்முறைகள் அச்சுறுத்தல்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் உலகின் அபாயகரமான நாடு.

செம்மணியில் புதைத்ததும்.. கொக்கட்டிச் சோலையில் சுட்டுத் தள்ளியதும்.. உங்களுக்கு மறக்கலாம். எமக்கு.. மறக்காது. அதன் வடுக்களை சுமக்கும் இனமானத் தமிழர்களாகவாவது நாம் இருக்க முயல்கிறோம்.

உங்களின் விசமத்தனமான பரப்புரைகளுக்கும் சிறீலங்காவின் நாசகார பரப்புரைகளை காவித் திரியவும் இங்கு எனி இடமளிக்கப்பட மாட்டாது.

உண்மை விவாதிக்க நாம் தயார். ஆதாரங்களோடு நாமும் வந்து விவாதிகத் தயாராகவே இருக்கிறோம். ஆனால் விவாதம் என்ற பெயரில் சிங்கள அரசின் அநியாயப் பரப்புரைகளை காவி வர அனுமதிக்க முடியாது. சிறீலங்கா சிங்களப் பயங்கரவாத தேசம் உலகில் இருப்பதே உலக மனித நாகரிகத்துக்கு கேடு.

Fri Apr 24, 09:53:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//இலங்கை தமிழர்களை நிம்மதியாக வாழ விடவேமாட்டிங்களா?//

நிம்மதி என்றால்.. ஊழல் அரசாங்கங்கள் உருவாக வாக்குப் போட்டுக் கொண்டு.. தமிழ் சினிமாவை ரசிச்சுக் கொண்டு.. மந்தைகளாக ஆண்டாண்டு காலமா அடிமைகளாக வாழ்வதையா நிம்மதி என்றீங்க. தமிழகத்தில் தான் அப்படி என்றால்.. ஈழத்திலாவது தமிழன் சொந்த மண்ணில சொந்த தேசம் அமைச்சு வாழ உதவி செய்திருந்தால்.. நீங்கள் தேடும் நிம்மதி எப்பவோ கிடைச்சிருக்கும். ஈழத்தமிழன் நிம்மதி கேட்க இந்தியா தான் அதை வைச்சு எப்படி நிம்மதி அடைய நிற்குதே தவிர...

தமிழனும்.. நிம்மதி அடைச்சிருப்பான் எப்பவோ. சுற்றி உள்ள இந்திய தேசமும்.. பாகிஸ்தானும்.. சீனாவுக்கும் தானாம் அதிகம் வலிக்குது. தமிழன் நிம்மதியா இருக்கிறது என்ன செய்வம் அதற்கு.

ஒற்றுமையின்மையே தமிழ் இனத்தின் அழிவுக்கு வித்து. தமிழ் இனம் தெற்காசியாவில் இருந்து அழிவது உறுதி..! இப்பவே தமிழகம் தமிழ் மறந்த தேசமாகிட்டுது.. இனி என்ன இருக்குது..!!

Fri Apr 24, 10:36:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

சிங்களப் பயங்கரவாத அரசுக்கு பிரச்சார விபச்சாரம் செய்யும் லண்டனில் இருந்து செயற்படும் எட்டப்பக் கும்பல் ஒன்றால் நடத்தப்படும் "தேசம்" என்ற இணையத்தில் இருந்து அனானி ஒருவரால் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் மீது அபாண்டப் பழிசுமத்தும் "வெட்டி ஒட்டல் தகவல்" ஒன்று பிரசுர உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆக்கம் ஏலவே இங்கு அனுமதிக்கப்பட்ட பின்னும் பிரச்சார நோக்கில் அது மீண்டும் மீண்டும் தமிழீழ தேச விரோத சக்திகளால் சிறீலங்கா பயங்கரவாத தேசத்தின் பிரச்சாரத்துக்கு வலுச் சேர்க்கவும் மக்களுக்கு தவறான கருத்துக்களை கொண்டு செல்லவும் இணைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான கூலிக் கும்பல்களின் செயற்பாடுகள் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலத்தில் தமிழீழத்திலும் பெருகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது அங்கு செயற்பட்ட கூலிகள் பல இப்போ மேற்குநாடுகளில் அகதி அந்தஸ்து வாங்கி அரச பணத்தில் உயிர் வாழ்ந்து கொண்டு கூலிப் பணத்துக்காக இப்படியான மக்கள் விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் குறித்து உலகத் தமிழினம் விழிப்பாக இருக்க வேண்டும்..!

நன்றி

வலைப்பதிவர் - குருவிகள்.

Fri Apr 24, 12:47:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

Colombo uses starvation, denial of medicine as weapons of war.

[TamilNet, Friday, 24 April 2009, 11:26 GMT]

The Government of Sri Lanka (GoSL) has been systematically limiting, delaying and blocking humanitarian supplies to the civilian population of Vanni committing a serious crime of war said a statement issued by the Political Division of the Liberation Tigers of Tamileelam (LTTE) Friday. Questioning why the International Community has failed to demand the Sri Lankan government to allow humanitarian supplies reaching the civilians of Vanni, the LTTE statement issued in Tamil said it was condemning Colombo in strongest terms for using starvation as a weapon of war against civilians and for violating the Geneva Conventions.

Sri Lankan government has blocked the departure of a humanitarian ship scheduled to reach Vanni a few days ago. The ship is waiting for permission to leave from the Sri Lankan authorities, according to civil officials. The officials further said there are still more than 125,000 civilians inside the LTTE held area in 12 square kilometers.

There has been no supplies since April 02.

A request, made by the local authorities on 11 April said Dry Rations were urgently in order to alleviate the hunger of the IDPs.

An earlier situation report, for the month of March, issued by the District Secretariat said that ships brought only 1079.902 MT of food items whereas the requirement was 4950 MT for the month of March.

Civilians of Vanni were only eating once a day for the last 5 weeks and many of them have no supplies at all since the SLA stepped up its offensive into the safety zone aiming to capture the civilians.

Fri Apr 24, 12:52:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//Even Nelson Mandela also proscribed as TERRORIST in this world. Everyone knows what kind of weapon he used.//

You are kidding.
How dare you to compare? Nelson Mandela never killed innocent people.

Fri Apr 24, 01:02:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

வரலாறு தெரியாதவங்களை எல்லாம் சிங்களவன் கூலியா தேர்ந்தெடுத்து வைத்திருப்பதும் ஒரு வகையில் நன்றே.

ஆபிரிக்க காங்கிரஸின் போராட்ட வடிவங்கள் பற்றிய அறிவற்றவர்கள் இங்கு படித்து பட்டறிந்து விட்டு புலி எதிர்ப்புப் பற்றி பறைசாற்றுவது நன்று.

"During its days in exile, the ANC was often criticised by western governments who shared the South African government's characterization of the group as a terrorist organization. Several high-profile anti-Apartheid activists such as Archbishop Desmond Tutu criticized the ANC for its willingness to resort to violence, arguing that tactics of non-violent resistance, such as civil disobedience were more productive. The ANC's willingness to ally with Communists was also the subject of both foreign and domestic criticism. A Pentagon report of the late 1980s described the ANC as "a major terrorist organization"."

http://en.wikipedia.org/wiki/African_National_Congress

Fri Apr 24, 01:15:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//"During its days in exile, the ANC was often criticised by western governments who shared the South African government's characterization of the group as a terrorist organization. Several high-profile anti-Apartheid activists such as Archbishop Desmond Tutu criticized the ANC for its willingness to resort to violence, arguing that tactics of non-violent resistance, such as civil disobedience were more productive. The ANC's willingness to ally with Communists was also the subject of both foreign and domestic criticism. A Pentagon report of the late 1980s described the ANC as "a major terrorist organization"."//

Ha ha...you think you are smart, but you don't.
Even your reference doesn't say that ANC bombed innocent civilians, or killed other political disidents. LTTE is in the terrorist list for those reasons, which you can't deny. Even LTTE sometimes claim resposibility for political killings. You never condemn bombing civilian targets in Colombo. What is the different between bombing in London and Colombo? You are so blind to know the truth. You think the whole world is stupid, and can be mislead by your propaganda.

Fri Apr 24, 01:33:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

Bombings in Colombo were a consequence act of long history of Genocide of Tamils still being written by Sinhala racist government in Sri Lanka. Tamils neither started nor did genocide in Sri Lanka.

you should put blame on Sri Lankan governmet over the Bombings in Colombo because they caused and created situations to do so.

IC didn't help to stop riots against Tamils even in the past in Sri Lanka. They are always supporting GoSL to do so.

So called Tamil political leaders such as Amirthalingham acted as spokemen of Sri Lankan and Indian governments and they forgot to be representatives of their own voters.

In 1987 Amirthalingham had given a statement that IPKF did not shell on Tamil people like current GoSL says over Vanni war. Are you still saying that is correct??!

All so-called Tamil political leaders contuniously warned by Tamils and asked dont act against Tamil eelam freedom fight and aspirations of Tamil people. Those who ignored the warning given were punished. that was not people's mistake.

GoSL sponsored terrorist groups such as EPDP,PLOTE,Karuna Group, TULF Shankari and so on are still doing the same. And they are still acting against their own people's aspiration and killing their won people for the order of Sinhala racist terrorist regime in Colombo. How can Tamils excuse them??! Are you saying they are doing right and not punishable??!

Bombing in Colombo is not a terroist act. That is response of Genocidal act of GoSL in Tamil's home land.

If US could attack whole Afghanistan in order to respond Sep 11/09 incident. why cant Tamils respond such a way against genocidal sinhala goverment in Sri Lanka??!

If American can attack and kill many people even after they killed their old friend Saddam, why Tamils cant do the same to stop genocide on them??!

IC forget to give protection to Tamils from genocide. Thats why Tamils are attacking Colombo regime to self-guard them seleves. Noone can say it is terrorism. If they try to say so.. them Tamils can blame America and NATO are also doing the same. Then We can call America's act is continental supper power terrorism.
Can you agree with that stand..??!

If you say yes.. then shut your mouth up.

Fri Apr 24, 02:35:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//Ha ha...you think you are smart, but you don't.
Even your reference doesn't say that ANC bombed innocent civilians, or killed other political disidents. LTTE is in the terrorist list for those reasons, which you can't deny. Even LTTE sometimes claim resposibility for political killings. You never condemn bombing civilian targets in Colombo. What is the different between bombing in London and Colombo? You are so blind to know the truth. You think the whole world is stupid, and can be mislead by your propaganda.//

dont laugh too much before get to know some thing detail.. ok..

Bombings

Umkhonto we Sizwe (or MK), translated "Spear of the Nation," was the active military wing of the African National Congress in cooperation with the South African Communist Party in their fight against the South African apartheid government.[1] MK launched its first guerrilla attacks against government installations on 16 December 1961. It was subsequently classified as a terrorist organisation by the South African government and media, and banned.

Landmark events in MK's military activity inside South Africa consisted of actions designed to intimidate the ruling power. In 1983, the Church Street bomb was detonated in Pretoria near the SA Air Force Headquarters, resulting in 19 fatalities and 217 persons injured, some of whom were military, and many were civilians. During the next 10 years, a series of bombings occurred in South Africa, conducted mainly by the military wing of the African National Congress. In the Amanzimtoti bomb on the Natal South Coast in 1985, five civilians were killed and 40 were injured when MK cadre Andrew Sibusiso Zondo detonated an explosive in a rubbish bin at a shopping centre. In a submission to the Truth and Reconciliation Commission (TRC), the ANC stated that Zondo acted in anger at a recent SADF raid in Lesotho.[4]

A bomb was detonated in a bar on the Durban beach-front in 1986, killing three persons and injuring 69. Robert McBride received amnesty for this bombing which became known as the "Magoo's Bar bombing".

In 1987, an explosion outside a Johannesburg court killed three people and injured 10; a court in Newcastle had been attacked in a similar way the previous year, injuring 24. In 1987, a bomb exploded at a military command centre in Johannesburg, killing one person and injuring 68 military or civilian personnel.

The bombing campaign continued with attacks on a series of soft targets, including a bank in Roodepoort in 1988, which four were killed and 18 injured. Also in 1988, in a bomb detonation outside a magistrate’s court killed three. At the Ellis Park rugby stadium in Johannesburg, a car bomb, killed two and injured 37. A multitude of bombs in “Wimpy Bar” fast food outlets and supermarkets occurred during the late 1980s, killing and wounding many people. In most of these events the victims were civilians, and of all races. Several other bombings occurred, with smaller numbers of casualties.

The TRC later found that in the case of the Durban beach front and Magoo's Bar bombings, these acts constituted "gross violations of human rights".[5]

http://en.wikipedia.org/wiki/Umkhonto_we_Sizwe

Fri Apr 24, 02:50:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//Bombing in Colombo is not a terroist act. That is response of Genocidal act of GoSL in Tamil's home land.//

Bombing in London is not a terrorist act. That is response of genocidal act of UK in Muslim's home land. - Osama Bin Laden

Fri Apr 24, 03:08:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//You are kidding.
How dare you to compare? Nelson Mandela never killed innocent people.//

Hey man,

I'm not kidding. Before comment anything try to understand something.

I put this comment to tell that how world treated people for its selfish.

Nelson Mandela never killed anyone and proscribed as terrorist in USA.

Fri Apr 24, 03:42:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

////Bombing in Colombo is not a terroist act. That is response of Genocidal act of GoSL in Tamil's home land.//

Bombing in London is not a terrorist act. That is response of genocidal act of UK in Muslim's home land. - Osama Bin Laden////

Who said to you that London incident was act of Osama.??! do you believe all statments given by British government and courts and are being geniune..??!

Can they do their investigations under the supervision of neutral and a third party mediator.?!

I am not supporting the act which UK currently doing in Muslim's world mean time not supporting acts some one did in UK.

But i strongly believe Britain can stop those type of actvities in London by stopping their won direct and indirect military interventions into other countires affairs and matters. this means Britain needs to stop using his military power beyond its boundary apart from circumstance bringing the danger to its own boarder and security of its own land. If they do so then they can stop bringing the violents into London.

I require the same the GoSL need to stop its genocidal acts and military intervensions into the tamil's homeland. then Tamils will stop attacking Colombo. If GoSL will pull out its military from Tamil's regions then Tamils will not have needs to attack Colombo..??! Peace dove will fly up in the sky of Tamil eelam and Sinhala Sri Lanka will also be peaceful.

Are you clear now..??!

Fri Apr 24, 03:52:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//In 1987 Amirthalingham had given a statement that IPKF did not shell on Tamil people like current GoSL says over Vanni war. Are you still saying that is correct??!//

Kuruvilal said இராணுவத்திடம் போகும் எந்தப் பொதுமகனும் நான் புலி ஆதரவாளன் புலிகள் நல்லது செய்தது நீதான் கெட்டனி என்று சொல்லமாட்டான்.

You have given a statement that LTTE did't shoot on Tamil people like Amirthalingam said over IPKF war. Are you still saying that is correct??

It is wrong to kill if some one punish for giving a statement. That is called terrorism. Will you accept if GOSL kill any parliment member for giving just statements? If you can't accept that, you can't accept the killings by LTTE too. If you are not honest, no one will listen to you. That's why IC is not taking serious of Tamil protesters.

Kuruvikal said //Bombings in Colombo were a consequence act of long history of Genocide of Tamils still being written by Sinhala racist government in Sri Lanka.//

Bombing in Wanni were a consequence act of long history of terrorism. - Rajapakshe
Hela Urumaya guys speak exactly like you. They say that Tamil racists commit Sinhala genocide.

How comes both of you speak same language? What is the different between you and Rajapakshe?

Tamils don't want to hear anything from you and Rajapakshe. Both of you do whatever you want. Please let the Tamil people to live in peace.

Fri Apr 24, 04:38:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//Bombing in Wanni were a consequence act of long history of terrorism. - Rajapakshe
Hela Urumaya guys speak exactly like you. They say that Tamil racists commit Sinhala genocide.//

It is telling me you have nothing in the head.

Tamils took arms to safe-guard their own land and rights very very after Sinhala racist governments started genocide of Tamils since independent of Sri Lanka (1948). The above article clearly mentioned those matters. but you didnt absorb it.

So Sinhalese can't call them-selves recent Tamils acts are terrorism and genocide.because they (Sinhalese) are the initiatives of terrorism and genocide in Sri Lanka.

//You have given a statement that LTTE did't shoot on Tamil people like Amirthalingam said over IPKF war. Are you still saying that is correct??//

Yes I am correct.

Amirthalingham punished by Tamils. because he ignored the warning delivered and was act as agent of Indian and Sri Lanka governments and worked against his own tamil people's aspiration and freedom fight in order to settle in his life wealthy in places such as Colombo and Chennai.

Are you more clear now..!

Fri Apr 24, 08:06:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//Yes I am correct.
Amirthalingham punished by Tamils. because he ignored the warning delivered and was act as agent of Indian and Sri Lanka governments and worked against his own tamil people's aspiration and freedom fight in order to settle in his life wealthy in Colombo and Chennai.//

Rajapakshe is using same arguments like you. He says it is right to kill LTTE agents, like Raviraj. Who are these guys to punish? Are they Gods? You speak like Osama bin Laden, who punish in the name religion. You punish in the name of Tamils. Well done. Thank you for showing true colours.

I am sorry for you, you still don't understand your mistakes. How can you win a war after making so many enemies? You have to make friends not enemies. Sinhalese are enemy. Muslims are enemy. Even one section of Tamils are enemy. India is enemy. Is it possible to win? You are no where. It is telling me you have nothing in the head. In your opinion, anyone who dosen't agree with your politics, or simply tell the truth is a government agent. This is the MOST STUPID THING you say. You only make fool of you. If you continue like this, no one can save you. Only the zombies will say yes to whatever you say.

//It is telling me you have nothing in the head.
Tamils took arms to safe-guard their own land and rights very very after Sinhala racist governments started genocide of Tamils since indepenent of Sri Lanka (1948). The above article clearly mentioned those matters. but you didnt absorb it.//

Look, my dear, you always think you are the only smart person in the world.
You are living in a closed community. You are manipulated by their propaganda. NO MORE. If you worry ONLY when Tamils are killed, but if YOU DON'T CARE when Sinhalese are killed... YOU ARE ALSO RACIST.

You don't know whats going on the other side. The Hela Urumaya guys speak samethings like you. You are busy with same kind of propaganda against each other. Both of you use racism, genocide, terrorism stuff, but blame on the other side. Both of you think, we are right.I don't see any difference between you.
BOTH OF YOU ARE EXTREMISTS. IF THEY ARE SINHALA EXTREMISTS, YOU ARE TAMIL EXTREMISTS. one is Lion another is Tiger.
NOW TAMIL PEOPLE HAVE ENOUGH.
Eelam Tamils know you belong to a minority. May be 5%. You are few but you make a lot of trouble to Tamils. Elam Tamils don't need your support. Thank you for your kindness. Please don't do any politics inthe name of Eelam Tamils.

Fri Apr 24, 08:13:00 PM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//Rajapakshe is using same arguments like you. He says it is right to kill LTTE agents, like Raviraj. Who are these guys to punish? Are they Gods? You speak like Osama bin Laden, who punish in the name religion. You punish in the name of Tamils. Well done. Thank you for showing true colours.//

Things you say are totally rubbish. Raviraj had been selected by Tamils and he was representative of his own people until his death. That's why he had been killed by Sri Lanka sinhala state terrorism.

Amirthalingham cant be compared with Raviraj. Amirthalingham called Tamil youths to fight for freedom and Tamil eelam in 1978 general election in Sri Lanka. People also respected his claim and elected him as Sri Lankan parliament member of Tamil people. but what he did in parliament.. what he did for his people.. he did every thing opposite to people thinkings.Finally he had been warned by people not to go wrong path. but he didn't respect his own people's verdict, who elected him to parliament of Sri Lanka. At the end people punished him. They had rights to do so. Other wise Amirthalingham would be quitted his seat in Parliament himself. Did he do that..??! he cheated his own people many times and many ways. thats why he had been punished by Tamil people.

Raviraj was not a member of Rajapakshe family and party. He was his own people's representative.

//Look, my dear, you always think you are the only smart person in the world.
You are living in a closed community. You are manipulated by their propaganda. NO MORE. If you worry ONLY when Tamils are killed, but if YOU DON'T CARE when Sinhalese are killed... YOU ARE ALSO RACIST.//

I think you are not describing about me but yourself very correctly in the above paragraph.

And it clearly says you are not able to differentiate freedom struggle and terrorism. Arms struggle of eelam Tamils is part of the freedom fight. Our Tamil eelam freedom fight had all phases of struggles since Thanthai Selva period.

Once Tamils would feel to stop arms struggle they will stop it. noone can't stop it forcefully. But ultimately Tamil eelam should be the final solution for our people freedom struggle.

If IC will be ready to give its support to solve this problem politically and peacefully by handing over meaningful solution which would satisfy majority of Tamils who live in and out-side of Tamil eelam. then.. Tamils and their truely representative Tamil tigers will give up their arms struggle. Tigers never liked to have blood bath in their homeland.

They are always showing their willingness to have meaningful solution for this eelam struggle peacefully. But in the past Governments were not trustworthy and cheated them by building up military powers against them.

you should understand and varify clearly why the arms struggle is still continuting.. who is the responsible for never ending struggle in Eelam. Tigers are not responsible for it.. wthich is very clear.

Sat Apr 25, 12:06:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//But ultimately Tamil eelam should be the final solution for our people freedom struggle.//

You have NO RIGHT to victimize Tamils, for something never can be achieved. You must take the responsibility for the war. You use the Tamil people as cannon fodder for Sri Lankan army, then make politics on dead bodies. YOU CAN'T BE A TAMIL. Of course Sri Lankan government kill Tamil civilians, ALMOST A GENOCIDE, NO ONE DENY. Meantime YOU ARE ALSO TO BE BLAMED FOR GENOCIDE OF TAMILS. BECAUSE YOU LET IT HAPPEN BY WAGING THE WAR FOR IMPOSSIBLE CAUSE. EELAM TAMILS WILL NEVER FORGIVE YOU.

WE DON'T WANT SINHALA RACISTS. WHO MUST TAKE RESPOSIBILITY FOR GENOCIDE OF TAMILS.
WE DON'T WANT TAMIL RACISTS. WHO MUST TAKE RESPOSIBILITY FOR GENOCIDE OF SINHALESE AND MUSLIMS.

BOTH YOU MUST STOP HATRED PROPAGANDA AGAISNT OTHER COMMUNITY. LET THE PEOPLE LIVE IN PEACE.

Sat Apr 25, 08:14:00 AM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

//Amirthalingham cant be compared with Raviraj.//

You are talking rubbish here. Again you think yourself smart, and others are stupid in the world. Thats why IC don't take serious of jokers like you. Amirthalingam and Raviraj were elected by the people in the election. You blame Amirthalingam as agent of Sri Lankan and Indian Governments. The government blame Raviraj as LTTE agents. YOU AGREE WITH GOSL IN THIS POINT. You prove again, that there is no difference between you and Rajapkshe. Tamil people have already recognized you.
You say Amirthalingam was warned by Tamil people. BULL SHIT. Tamil people would never do such things when Amirthalingam representing Tamils in parliament. TAMIL PEOPLE MAY WARN YOU, BECAUSE YOU ARE NOT SELECTED BY THEM AS THEIR REPRESENTATIVE.

THE KILLING OF UNARMED POLITICIANS AND DISIDENTS IS TERRORISM. There is no other word in English or Tamil. Terrorism is always terrorism. You say IC don't know what is terrorism, and you try to teach them. Whom you want to fool? YOU MAKE FOOL OF YOURSELF ONLY.

Sat Apr 25, 08:50:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//You have NO RIGHT to victimize Tamils, for something never can be achieved. You must take the responsibility for the war. You use the Tamil people as cannon fodder for Sri Lankan army, then make politics on dead bodies. YOU CAN'T BE A TAMIL. Of course Sri Lankan government kill Tamil civilians, ALMOST A GENOCIDE, NO ONE DENY. Meantime YOU ARE ALSO TO BE BLAMED FOR GENOCIDE OF TAMILS. BECAUSE YOU LET IT HAPPEN BY WAGING THE WAR FOR IMPOSSIBLE CAUSE. EELAM TAMILS WILL NEVER FORGIVE YOU.

WE DON'T WANT SINHALA RACISTS. WHO MUST TAKE RESPOSIBILITY FOR GENOCIDE OF TAMILS.
WE DON'T WANT TAMIL RACISTS. WHO MUST TAKE RESPOSIBILITY FOR GENOCIDE OF SINHALESE AND MUSLIMS.

BOTH YOU MUST STOP HATRED PROPAGANDA AGAISNT OTHER COMMUNITY. LET THE PEOPLE LIVE IN PEACE.//

As I said in the beginning you dont know any thing about Eelam tamils ,their history and struggle. you just writing what you think or you heared in media.

Tamil Eelam struggle was started since independent of Sri Lanka, actually just few years after British handed over the power of ruling the country to Sinhalese dominant government.

Tamils didnt start any genocide in Sri Lanka. but Various Sinhalease governments were started and still doing the genocide of tamils since 1952.

Tamil people in Sri Lanka started their arms struggle in 1972 to save guard themseleves from continuous sinhalease genocidal acts in their own home land.

Tamils didnt attack even Muslims first. Some muslim extremist lived in East of Sri Lanka, Mannar and Vavuniya were started to operate jihad and muslim home guard thug groups in order to help SL army operation against Tamils particularly in East of Sri Lanka and Mannaer and were informers to SL army intelligent wings.

Since 1985 many Tamil people in East were tortured and displaced after their homes were looted by Jihad and Muslim home guard thugs.

Are you calling those Muslim extremist Jihad groups worked closely with Former minister Ashraf were innocent Tamil speaking Muslims..??! do you justify they did every thing good for Tamils..??!

At one stage after continuous warnings Tamils took some actions against those groups in order to bring peace among Tamils and Tamil speaking muslims.

After they found some weapons in Jaffna Mosques, Muslims asked to leave Jaffna temporally in order to prevent same situation created by muslims extemist groups in places such as Muthoor and other villages in eastern province of Sri Lanka.

I have evidence even in My own family. 1986 Mulims Jihad group operatives operated in Mannar abducted my uncle who worked as health officer. they threatened him and released after two days torture. this is the real situation still in North and Esat Sri Lanka.

Do you know clearly what is happening in Sri Lanka.. if dont know please get to know something bofore write your comments in public. but you call this is our propaganda. this is not propaganda. This is voice of sufferers.

Sat Apr 25, 09:07:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

//You are talking rubbish here. Again you think yourself smart, and others are stupid in the world. Thats why IC don't take serious of jokers like you. Amirthalingam and Raviraj were elected by the people in the election. You blame Amirthalingam as agent of Sri Lankan and Indian Governments. The government blame Raviraj as LTTE agents. YOU AGREE WITH GOSL IN THIS POINT. You prove again, that there is no difference between you and Rajapkshe. Tamil people have already recognized you.
You say Amirthalingam was warned by Tamil people. BULL SHIT. Tamil people would never do such things when Amirthalingam representing Tamils in parliament. TAMIL PEOPLE MAY WARN YOU, BECAUSE YOU ARE NOT SELECTED BY THEM AS THEIR REPRESENTATIVE.

THE KILLING OF UNARMED POLITICIANS AND DISIDENTS IS TERRORISM. There is no other word in English or Tamil. Terrorism is always terrorism. You say IC don't know what is terrorism, and you try to teach them. Whom you want to fool? YOU MAKE FOOL OF YOURSELF ONLY.//

Amirthalingham was not people's representative at one stage. He didnt care about his own people and he worked as 100% agent for indian and Sri Lankan governments. but Raviraj worked 100% as his own people's representative until his death.

Tamils in Sri Lanka didnt cry or worry for death of Amirthalingham. But people cried at death of Raviraj. you would know this if you followed incidents happened in Sri Lanka in the past.

Killing of Innocent civilians by State Armys is not called terrorism. Killing of innocent people by politicians is not called terrorism. Killing innocent people for politician benefits is not called terrorism. Killing leaders and people by world and regional supper powers is not called terrorism. They would be tactics.. Isnt it...!

but Tamils took arms and save guard them-selves from genocide is the only called as terrorism.

What a fool.. you are. shame on you for the above comments.

Sat Apr 25, 10:08:00 AM GMT+1  
Blogger kuruvikal செப்பியவை...

அனானி ஒருவர் தொடர்ந்து விளக்கப்படுத்திய விடயங்களை விளக்கிக் கொள்ள முயலாமல் ஒரே விடயத்தை ஒரு சம்பந்தமும் இன்றி மாற்றி மாற்றி எழுதி வருவதனால் அவரின் கருத்துக்கள் ஏதேனும் ஒரு விடயத்தை சான்றோடு சொல்லும் எனில் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும். இது குறிப்பிட்ட ஒரு அனானிக்கு மட்டுமே ஆகும்.

குருவிகள்
வலைப்பதிவர்.

Sat Apr 25, 12:11:00 PM GMT+1  
Anonymous Anonymous செப்பியவை...

இக்கட்டுரையை இங்கும் பிரசுரித்துள்ளார்கள்...

http://www.paristamil.com/tamilnews/?p=4041

Fri May 01, 05:53:00 AM GMT+1  

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க