Friday, April 20, 2012

இராமாயணம்.. முப்பரிமான..அனிமேசன் சித்திரம்...புகுத்தப்படும் வட இந்தியம்.இந்த காணொளியில்.. ஒரு இடத்தில் இராமனின் பின் அணிவகுத்து போருக்குச் செல்லும் வானர வீரர்கள்.. "இந்தியா ஜெயிக்க" என்று கத்திச் செல்கின்றனர்.

இந்தியா என்ற சொல்லே.. பிரித்தானிய காலனித்துவத்தோடு பிறந்த சொல். அது எப்படி இராமாயண இதிகாச சொல்லாக இந்தக் காணொளிக்குள் புகுத்தப்பட்டது..???!

இப்படித்தான்.. இலங்காபுரியை ஆண்ட செல்வச் செழிப்பும்.. தொழில்நுட்ப.. அறிவியல்... அறிவும் மிக்க.. தமிழ் மன்னனான இராவணனின் வளர்ச்சியை சிதைக்க.. அவனை.. கெட்டவனாகக் காட்டிய.. வட இந்திய ஆளும் வர்க்கம்.. அவன் இராச்சியத்தை அழிக்க.. ஒரு பெண்ணை மையமாக வைத்து அவனை ஒரு பயங்கரவாதியாக்கி போர் செய்து.. சிதைத்தனர். தங்களின் இந்த பயங்கரவாதச் செயலுக்கு தர்மம் என்று பெயரிட்டு அதனை மக்கள் மனங்களில் நியாயம் என்பது போல பதிவித்து விடுகின்றனர் வட இந்தியப் பயங்கரவாதிகள்..!

அங்கும் விபீசனன் என்பவன்.. இராவணனோடு கூட இருந்து விட்டு வட இந்தியருக்கான காட்டிக்கொடுப்பாளனாக  மாறி இருக்கிறான். அவனின் முழு ஒத்துழைப்போடு தான் இராமன் இராவணனாகிய சிவனை வழிபடும் சைவனாகிய தமிழ் மன்னனை அழித்து ஒழிக்கிறான்.

இன்றும் அதே தான். இலங்கைத் தீவில் தமிழர்களின் தாயக இருப்புக்காகப் போராடிய அண்ணன் பிரபாகரனின் போராட்டத்தையும் வட இந்திய ஆளும் வர்க்கம் பயங்கரவாதமாகச் சித்தரித்து.. அதற்கு ஆதரவாக நின்ற..போராளிகளை.. தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக்கி.. தமிழர்களின் பொது எதிரிகளான சிங்களவர்களுக்கு ஆயுதமும் உதவியும் வழங்கி.. கொடிய மனித உரிமை மீறல்களுடன் யுத்தம் செய்து தமிழர்களை அழித்து.. இலங்கைத் தீவை வட இந்தியர்களுக்கு விசுவாசமான சிங்கள அடிமைகளிடம் கையளித்துள்ளனர்..!

இங்கும் கருணா..  போன்ற விபீசனர்கள் .. டக்கிளஸ்.. சங்கரி.. சித்தார்த்தன்.. வரதராஜப்பெருமாள்.. சுமந்திரன் போன்ற கூனிகளும்.. இந்திய உளவுப்பிரிவான றோவோடு..  சேர்ந்து கொண்டு.. மீண்டும் ஒரு முறை தமிழர் தாயகத்தைக் காட்டிக் கொடுத்துள்ளனர்.. கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்றும் கூட கம்பராமாயணப் படி.. வட இந்தியர்கள் தமிழர்கள் மீது கொடுங்கோண்மையோடே ஆட்சி நடத்தி வருகின்றனர். தமிழர்கள் தங்கள் சொந்த இராச்சியத்தை அடைய வட இந்தியர்கள் அப்போது போல.. இப்போதும் தடையாகவே இருந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஈழத்தில்.. தமிழகத்தில்.. கம்பவாரிதிகள் என்போரும் இன்றும் கம்ப இராமாயண அடிப்படைகளில் இராமனை மேன்மைப்படுத்தி.. இராவணனை தமிழனை அரக்கனாக்கி..  வட இந்திய இதிகாசத்திற்கு காவடி தூக்கி வருகின்றனர்..! தமிழர்களைக் கொண்டே தமிழர்களின் தொன்மை மறக்கச் செய்கின்றனர்.

இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி.. தமிழர்கள் மீண்டும் தம் செல்வச் செழிப்பு மிக்க.. எதிரிகளாலேயே போற்றப்படும்.. அறிவாற்றல்.. கொண்ட.. இராச்சியத்தை ஆளும் நாள்.. ஒரு நாள் வந்தே தீரும். அதற்காக தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஓய்வின்றி.. சோர்வடையாமல்.. உழைக்க வேண்டும்..!

(யாழில் நெடுக்காலபோவன்.)

Labels: , , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 11:03 AM

0 மறுமொழி:

Post a Comment

இந்த இடுகைக்கு மேலதிக தொடுப்புச் செய்ய:

Create a Link

<< முகப்புக்குச் செல்க